Homeவர்த்தகம்அனைத்திலும் சமத்துவம் வேண்டும்! -என்றி லாய்

அனைத்திலும் சமத்துவம் வேண்டும்! -என்றி லாய்

கோலாலம்பூர், அக்.24-
அசுரனை அழித்து வெற்றி பெற்ற திருநாளை தீபாவளியாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இருள் நீங்கி ஒளி பிறந்த இந்த நந்நாள் அனைவரின் வாழ்விலும் ஏற்றத்தையும் ,சுபிட்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்று கெஅடிலான் வங்சா மாஜூ தொகுதி தலைவர் என்றி லாய் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தீபாவளி பொதுத் தேர்தலைச் சந்திக்கும் சூழலோடு இந்நாட்டு இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நவீன உலகில் எவரும் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. இதற்கு ஒரு மாற்றம் தேவை. மக்களும் இந்த மாற்றத்தையே விரும்புகின்றனர் என்றார் அவர்.


இந்த மாற்றமானது முன்னேற்றமடைந்த மலேசிய சமூகத்தில் சரிசமமான மற்றும் நிலையான சுபீட்சத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் என்றி லாய் குறிப்பிட்டார்.
இதன் பொருட்டு வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் சரியான தேர்வைச் செய்வர் என்று என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more