உலகளாவிய போட்டித்தன்மையை நிலைப்படுத்த உயர்கல்வியில் தொழில்நுட்பம் -டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின்

103

ஸ்ரீ இஸ்கண்டார், நவ.22-

கல்வியில் குறிப்பாக உயர்கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றல்ல, மாறாக அது உலகளாவிய போட்டித்தன்மையை நிலைப்படுத்துவதற்கான ஒரு முக்கியத் தேவையாகும் என்று உயர்கல்வி அமைச்சர், டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் வலியுறுத்தினார்.

“இது அணுகக்கூடிய கல்வி முறையை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஒவ்வொரு மாணவரின் கல்வித் தேவைக்கேற்ப அனுபவங்களைப் பொருத்தமாக்கிக் கொள்வதற்கான உலகளவிலான இணைப்பின் மூலம் கல்வியை மேற்கொள்ள ஊக்குவிக்கும் 2015-2025க்கான மலேசிய உயர்கல்வி நடவடிக்கைத் திட்டத்திற்கேற்ப அமைந்துள்ளது.”

அந்த வகையில் தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு நமது கற்றல்-கற்பித்தலில் மட்டுமின்றி கல்வியை நிர்வகிப்பதிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (யூ.டி.பி.) நடைபெற்ற கல்வி வடிவமைப்புக்கான அனைத்துலக மாநாட்டில் உரையாற்றிய போது கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினருமான காலிட் நோர்டின் குறிப்பிட்டார்.

-அஸ்ட்ரோ அவானி