spot_img
8.4 C
London
spot_img
Home மலேசியா கல்வி சாய் இண்டர்நேஷனல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா: பாலர் கல்வி துறையில் அதிகமான இந்தியர்கள் பட்டம் பெற்றனர்

சாய் இண்டர்நேஷனல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா: பாலர் கல்வி துறையில் அதிகமான இந்தியர்கள் பட்டம் பெற்றனர்

0
431

கோலாலம்பூர், மார்ச் 4-

இங்குள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சாய் இண்டர்நேஷனல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பாலர் கல்வி துறையில் அதிகமான இந்தியர்கள் பட்டம் பெற்றனர்.

செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இக்கல்லூரியின் 7ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உணவு மற்றும் பானம், சமையல், பாலர் பள்ளி, குழந்தை பராமரிப்பு போன்ற துறைகளில் மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.

இவ்வாண்டு மொத்தம் 200 பேர் பட்டம் பெற்றதாகவும் இவ்வெண்ணிக்கை வரும் ஆண்டில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே இக்கல்லூரியின் இலக்காகும் என்றும் இதன் தோற்றுநர் பேராசிரியர் குகேந்திரன் செல்வா தெரிவித்தார்.

இக்கல்லூரி டிவெட் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இக்கல்லூரியில் இணைவதற்கு எண், எழுத்து, வாசிப்பு போன்ற அடிப்படை தகுதி போதுமானது என்றும் பட்டமளிப்பு விழாவிற்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விவரித்தார்.

இந்தத் திறன் பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதையும் குகேந்திரன் செல்வா சுட்டிக் காட்டினார்.

வளமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் டிவெட் பயிற்சியை மேற்கொள்ள இந்திய மாணவர்கள் அதிகமானோர் முன்வர வேண்டும். காரணம், பட்டம் பெறும் மாணவர்களில் 99 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பது இப்பயிற்சியின் தேவை நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார்.