spot_img
8.6 C
London
spot_img
Home மலேசியா கல்வி சன் பெங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் & புத்தகங்கள் அன்பளிப்பு! -பள்ளி வாரியம் வழங்கியது

சன் பெங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் & புத்தகங்கள் அன்பளிப்பு! -பள்ளி வாரியம் வழங்கியது

0
409

கோலாலம்பூர், மார்ச் 7-

மீண்டும் பள்ளிக்குப் போகலாம் திட்டத்தின் கீழ் தலைநகர் ஜாலான் சன் பெங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அண்ட்ரூ டேவிட் தலைமையிலான பள்ளி வாரியம் பள்ளிச் சீருடைகள் மற்றும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியது.

இப்பள்ளியில் முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் ஆண்டு வரை பயிலவிருக்கும் 79 மாணவர்களுக்கும் 25 பாலர் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிச் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.

“விரைவில் புதிய பள்ளித் தவணை தொடங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் பள்ளி வாரியம் வழங்கியிருக்கும் சீருடைகள் மற்றும் புத்தகங்கள் பெற்றோர்களின் சுமையைச் சற்று குறைப்பதற்கு உதவும் ” என்றார் அவர்.

இந்தியர்கள் தமிழ்ப்பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாரியமும் அதன் செயற்குழுவும் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றே இது . மற்ற பள்ளிகளுக்கு ஊக்குவிப்பாய் அமையும் இத்திட்டம் நாடு முழுமையும் தொடரப்பட வேண்டும் என்று அண்ட்ரூ டேவிட் கேட்டுக் கொண்டார்.

இப்பள்ளியில் பி40 மாணவர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களை வாரியம் தொடர்ந்து மேற்கொள்ளும். அவ்வகையில் வாரிய உறுப்பினர் டத்தோ ரஜினி வாயிலாக வெள்ளிதோறும் மாணவர்களுக்கு இலவச வாழை இலை உணவு பரிமாறப்படும் என்றார்.

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ திட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய பள்ளித் தலைமையாசிரியர் திருமதி பாக்கியலெட்சுமி தேவி, ஆசிரியர்கள், வாரிய உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இவ்வேளையில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் அண்ட்ரூ டேவிட் .