உடல் நலத்திற்கு வலுவூட்டும் மலையேறும் நடவடிக்கை

83

கோலாலம்பூர், ஏப்.17-

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மலையேறும் நடவடிக்கை சங்கத்தினர் மலையேறும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர்.

சித்திரை புத்தாண்டில் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு மலையேறும் நடவடிக்கைக்கு சங்கம் ஏற்பாடு செய்ததாக இதன் தலைவர் ஜி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கைக்கு முழு ஆதரவை வழங்கிய ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், எண்ட்ரூ டேவிட் தலைமையிலான ம.இ.கா. தேசிய விளையாட்டு பிரிவினர், சுந்தர் தலைமையிலான சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவினர் ஆகியோருக்குத் தமது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

புத்தாண்டில் இந்த மலையேறும் நடவடிக்கையை ஏற்பாடு செய்ததன் முக்கிய நோக்கம் புத்துணர்ச்சியைப் பெறுவதாகும் என்றார்.

“அதே சமயம், ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எண்ட்ரூ டேவிட், செயலாளர் அரவிந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் சுந்தர், ம.இ.கா. கோம்பாக் கிளைத் தலைவர் கோபிராஜ், சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு பொருளாளர் எஸ்.சுகன், சிலாங்கூர் மாநில ம.இ.கா. விளையாட்டு பிரிவு தலைவர் முருகன், சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி தலைவர் மாதவன் மற்றும் அனைத்து அம்சங்களிலும் எங்களுக்கு ஆதரவளித்த சங்க செயற்குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டம் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் “என்றார்.

இந்த மலையேறும் நடவடிக்கையில் சுமார் 75 பேர் பங்கேற்றனர்.