கோவை
அயராத உழைப்பும், உன்னத பேரறிவும் இணைந்த மகிழ்வான தருணத்தில், மலேசியாவைச் சேர்ந்த முனைவர் சத்தியவதிக்கு ‘சிங்கப்பெண்ணே’ விருது வழங்கப்பட்டதோடு, உலகளாவிய கவனமும் முதன்மையான கௌரவமும் கிடைத்தது.
அண்மையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற Global Business Connect & Femi9 Star Awards 2025 விருது விழாவில், மலேசியாவைச் சேர்ந்த முனைவர் சத்தியவதி இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
Femi9 மாதவிடாய் நாப்கின்களின் மலேசிய முகவராகச் செயல்பட்டு, அதனை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் முனைவர் சத்தியவதிக்கு, அவரது சமூக சேவையையும் தெளிவான எதிர்காலக் கண்ணோட்டத்தையும் பாராட்டி, Femi9 நிறுவனத்தின் நிறுவுநர் டாக்டர் கோமதி இந்த விருதை வழங்கினார்.
“Femi9 நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் தொடரும் பயணம், இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக இருக்கும். இந்த விருது, என் ஒவ்வொரு முயற்சிக்கும் கிடைத்த உறுதியான அங்கீகாரம்!” என்று உருக்கமாக கூறினார் முனைவர் சத்தியவதி.
மேலும், பெண்கள் வர்த்தகத்தில் தங்களை நிலைநாட்டும் வகையில் Femi9 நிறுவனத்தின் வாய்ப்புகளை பயன்படுத்த அழைப்பு விடுத்த அவர், “நாம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, மாற்றத்தை விரைவாகக் கொண்டுவர முடியும்,” என்றார்.
இந்த விருது விழா கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் Femi9 மாதவிடாய் நாப்கின்கள் அனைவருக்கும் அறியப்படுவதற்காக முனைவர் சத்தியா மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்று நிறுவுநர் டாக்டர் கோமதி தெரிவித்தார்.
பெண்களின் முன்னேற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தும் இந்த விழாவில் Digital Marketing மற்றும் AI தொழில்நுட்பங்களை கொண்டு வர்த்தகத்தை விரிவாக்க விரும்பும் தொழில்முனைவோர்களும், தங்களது எண்ணங்களையும், யுத்திகளையும் பகிர்ந்து கொண்டனர்.

