கோலாலம்பூர்:

Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia ஏற்பாட்டில் நடைபெற்ற ஆரோக்கியம் & நல்வாழ்வு நிகழ்ச்சி 2.0 சனிக்கிழமை நவம்பர் 15-ஆம் தேதி அன்று டாமான்சாரா டாமாயிலுள்ள Sairam Saibaba Dwarakamai Centre-இல் நடந்தது. அனைத்து வயதினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மாலை 3 மணிக்கு தொடங்கி விளையாட்டுகள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறிப்புகள், உடற்பயிற்கள், அதிர்ஷ்ட குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சமூகத்தில் ஆரோக்கிய விழிப்புணர்வை உயர்த்தவும், நல்வாழ்வு பழக்கங்களை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக Persatuan Sairam Saibaba Dwarakamai Malaysia அமைப்பின் தலைவர் சாய் திரேசா மோகன் தெரிவித்தார்.

6 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களைச் சேர்ந்த 100 பேருக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று பல்வேறு செயல்பாட்களில் உற்சாகமாக இணைந்தனர். இந்நிகழ்ச்சி தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும், எதிர்காலத்திலும் தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆரோக்கிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இத்தகைய திட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக ர் சாய் திரேசா குறிப்பிட்டார்.

பங்கேற்பாளர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியும் இரவு உணவும் வழங்கப்பட்டது.