கோலாலம்பூர்,
கோலாலம்பூர் டைம்ஸ் ஸ்குவேர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற Top Asia Corporate Ball 2025 விருது வழங்கும் விழாவில், MM Oil நிறுவனம் ASEAN Brand Of The Year Award 2025 என்ற உயரிய விருதைப் பெற்றது.
ஆசியான் வட்டாரத்தில் நிறுவனத்தின் தரநிலையும், நம்பகத்தன்மையும், தொழில்துறையில் பெற்ற முன்னேற்றத்தையும் இந்த விருது வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் MM Oil நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி வாடிக்கையாளர்கள், வர்த்தகப் பங்காளிகள், நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
இந்த வெற்றி எங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன். மேலும் பல சர்வதேச விருதுகளைப் பெற தொடர்ந்தும் முயற்சி செய்து வருகிறோம் என்று அவர் தெரிவ்த்தார். கூறினார்.
மேலும், MM Oil தனது வர்த்தகத்தைப் பிற ஆசியான் நாடுகளிலும் விரிவுபடுத்துவது நிறுவனத்தின் அடுத்த நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
MM Oil நிறுவனம் உயர்தரமான கனரக லூப்ரிகேன்ட் எண்ணெய்கள் (Premium Heavy Duty Lubricants) தயாரிப்பில் முன்னணி உற்பத்தியாளராக திகழ்கிறது என்றார் அவர்.

