கோலாலம்பூர்:

KLSICCI எனப்படும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரலில் நடைபெறும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் கூறினார்.

சம்மேளத்தின் சட்டத் திட்டங்களுக்கு இணங்க அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகி விடுவதாக நவம்பர் 27-ஆம் தேதி ஷெங்கா மாநாட்டு மண்டபத்தில் தீப வண்ணங்கள் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் போது நிவாஸ் ராகவன் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் சிறு-குறு- நடுத்தர வர்த்தகர்களின் வியாபார வளர்ச்சிக்கு அரசாங்கத்துடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

உறுப்பினர்கள், சம்மேளத்தின் முன்னாள் தலைவர்கள், தூதரக பிரதிநிதிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு நிதி அமைச்சும், இலக்கியவியல் அமைச்சும் ஆதரவு வழங்கிய நிலையில் அவர்களுக்கு நிவாஸ் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சுபாங் சட்டமன்ற உறுப்பினர் Michelle Ng தமதுரையில் ஒற்றுமையே உயர்வை தரும் என்றும் கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளத்தின் தீபாவளி உபசரிப்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், அதிர்ஷ்ட குழுக்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 500-க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.