கோலாலம்பூர்:
இயக்குநர் காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ESP திரைப்படத்தின் பூஜை இன்று திருமுருகன் ஆலய பரிபாலன சபையில் சிறப்பாக நடைபெற்றது.
மஇகா துணை தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் இப்பூஜையில் கலந்து சிறப்பித்த நிலையில் இயக்குநர் சரன், லிங்குசாமி நடிகர்கள் வித்தார்த், நடிகைகள் லட்சுமி மேனன், ரக்ஷிதா மஹாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்புகள் இன்று தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும் என்று இயக்குநர் காமராஜ் தெரிவித்தார்.
கோலாலம்பூர், கிள்ளான் ஆகிய பகுதிகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும், பல மலேசிய கலைஞர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
படம் 2026ஆம் ஆண்டில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

