பெட்டாலிங் ஜெயா:
Star Academy Heineken Malaysia Bartender National Finals 2025 போட்டியில் சபா மாநிலத்தின் Langkah Syabas Beach Resort-ஐ சார்ந்த கோரா ஜீன் கான்ட்வெல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தேசிய சாம்பியன் பட்டத்துடன் சேர்த்து அம்ஸ்டர்டாம் பயணமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடைபெறும் உலகளவிலான போட்டியில் அவர் மலேசியாவைப் பிரதிநிதிக்கவுள்ளார்.
இந்தப் போட்டியில் 2-ஆம் இடத்தை Johor Taman Daya-வில் உள்ள Brew Garten-ஐ சேர்ந்த செங் ஸீ ஜெய் வென்றார். அவருக்கு 2,000 ரிங்கிட் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மேலும், 3-ஆம் இடத்தை கோலாலம்பூர்/சிலாங்கூர் பகுதியைச் சேர்ந்த The Beer Factory, Hartamas-இன் டைம்லர் கேன் ககாஸ் பெற்றார். அவருக்கு 1,000 ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
ஆறு மாநிலங்களின் வெற்றியாளர்கள் தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் மூன்று சுற்றுகள் கொண்ட சவாலான இறுதிப்போட்டியின் மூலம் சாம்பியன் தேர்வு செய்யப்பட்டது
இப்போட்டி நவம்பர் 28-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவின் JioSpace-ல் நடைபெற்றது.


