செலாயாங்:
சிலாங்கூர், பத்துகேவ்ஸிலுள்ள ஒரு சிறார் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 10 வயது சிறுவனுக்கு இயற்கைக்கும் மாறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது மாணவர் மீது செலாயாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த மார்ச் 27-ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக, அந்த மாணவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இருப்பினும், அவர் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிறுவன் என்பதால், அடையாளத்தைப் பாதுகாக்க இந்த வழக்கு மூடிய அறைக்குள் விசாரணை செய்யப்பட்டது.

