கோலாலம்பூர்:

மாறா எனும் விண்மீன் பிரத்தியேகத் தொடரின் மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் நெறிமுறையான
பயன்பாடு உட்பட இளைஞர்களிடையே பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு நடைமுறைகளின் விழிப்புணர்வை ஏற்படுத்த மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்துடன்(MCMC) கைக்கோர்க்கிறது.

இந்த டெக்னோ-திரில்லர் தொடர் மாறா, ஜூலை 6 இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறுகையில், “முன்னணி உள்ளூர் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்குப் பிராண்டாக, உயர்தரத் தாய்மொழி கதைசொல்லலை உயர்த்துவதிலும், உள்ளூர் திறமைகள் வளரக் கூடிய அர்த்தமுள்ளத் தளங்களை உருவாக்குவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதன் ஒரு பகுதியாக, 2026 பிப்ரவரி முதல் எங்களின் புதிய உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை முழு ஒரு மணி நேரமாக நீடித்துள்ளோம்.

இதன் மூலம் உள்நாட்டுப் படைப்பாளிகளுக்குச் செழுமையான கதைசொல்லல் மற்றும் கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பது சாத்தியமாகிறது.

பொழுதுபோக்கைத் தாண்டி, நேர்மறையான சமூகத் தாக்கத்திற்கான ஒரு சக்தியாக உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, எங்களின் ‘நன்மைக்கான குரல்’ என்ற கூற்றின் மூலம் எங்களின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆட்சி (ESG) செயல்திட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

மாறா தொடரின் மூலம், இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் நெறிமுறையான பயன்பாடு மட்டும்மல்லாது பாதுகாப்பான இணைய நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவதற்கும் மின்னியல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் இந்த காலத்திற்குத் தேவையான முயற்சியில் MCMC-உடன் கூட்டாண்மையில் இணைவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.

சமூகங்களுக்கு அறிவை வழங்கி அவர்களை வலுப்படுத்துவதிலும், பொறுப்பான ஊடகப் பயன்பாட்டை வளர்ப்பதிலும், மேலும் தகவலறிந்த, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் டிஜிட்டல் ரீதியாக உறுதியான சமூகத்தை உருவாக்குவதிலும், எங்களின் தொடர்ந்த அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.”

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கூறுகையில், “பாதுகாப்பான இணைய பயன்பாட்டுக்கான பிரச்சாரம், இணையவழி பாதுகாப்பு மற்றும் பொறுப்பான டிஜிட்டல் பயன்பாடு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதில் MCMC தொடர்ந்து உறுதியாக உள்ளது. இந்தப் பிரச்சாரம், அனைத்துப் பயனர் குழுக்களையும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்ப அமைப்புகளுக்கு இணைய பாதுகாப்பைப் பற்றி தகவலிக்கும் தொடர்ச்சியான முயற்சியாகும்.

தொழில் துறையினருடன் மூலோபாயக் கூட்டாண்மைகள் மற்றும் சமூக அடிப்படையிலானத் திட்டங்களின் செயல்பாடு மூலம், அனைவருக்கும் பாதுகாப்பான இணைய பயன்பாட்டுச் சூழலை உருவாக்கும் நீண்டகால முயற்சிகளையும் இந்த முன்முயற்சி ஆதரிக்கிறது.”

விருது வென்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ஜெயமூர்த்தி ஜெபி இயக்கித் தயாரித்த மாறா, சமூக ஊடக இன்ஃப்ளூவன்சராகப் புகழும் நிதி நிலைத்தன்மையும் பெற தனது வழிகாட்டி அலிஸ் உதவியுடன் முயற்சிக்கும் 19 வயதான பல்கலைக்கழக மாணவி மறகதவல்லி (மாறா) என்ற நாயகியை மையமாகக் கொண்டு நகர்கிறது.

அவளது ஆவல் அதிகரிக்கும் போது, மாறா நெறிமுறை எல்லைகளை மீறத் தொடங்குகிறாள். ஒரு வைரல் பதிவுக்காகத் தனது மாற்றுத்திறனாளி சகோதரியைப் பயன்படுத்துகிறாள். அதனை அவளது பகையாளர் பிரிந்தா அம்பலப்படுத்தவே பிரிந்தாவைப் பழிவாங்க அவளது அந்தரங்கக் காணொளியை மாறா வெளியிடுகிறாள். அது துயரமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றது.

காவல்துறை அவளை நெருங்கும் நிலையில், மாறா தனது டிஜிட்டல் தடயங்களை அழித்து மறைமுகமாக முயற்சிக்கிறாள். இறுதியில் குற்ற உணர்வுக்கும் உயிர் தப்பிக்கும் போராட்டத்திற்கும் இடையில் சிக்கிக் கொள்கிறாள். ஒப்புக்கொள்வதா அல்லது தப்பியோடுவதா என்ற அவளதுத் தேர்வே இந்தக் கதையின் மையமாக அமைகிறது.

மாறா தொடரில் டிஷாலனி ஜாக், புனிதா சண்முகம், திவ்யா கியா, சத்யா காந்தி, கே. பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். விறுவிறுப்பான இத்தொடரின் புதிய அத்தியாயங்களை, ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கு வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

நெறிமுறைப் பரிசீலனையின்றிச் சமூக ஊடகப் புகழைத் தேடுவது வாழ்வியல் உலகில் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை ‘மாறா’வின் பயணத்தின் மூலம் வெளிப்படுத்தி இளம் பார்வையாளர்களுக்கானக் காலத்திற்கேற்ற முக்கியமான செய்தியை ஆஸ்ட்ரோ வழங்குகிறது. டிஜிட்டல் பொறுப்புணர்வுக் குறித்த விழிப்புணர்வை ஆழப்படுத்தும் வகையில் மாறா வடிவமைக்கப்பட்டுள்ளது.

MCMC-இன் ‘பாதுகாப்பான இணையம்’ பிரச்சாரத்தின் கீழ், இந்தத் தொடரானதுப் பச்சாதாபம், தனியுரிமை மற்றும் கவனமான இணைய நடத்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இது பார்வையாளர்களுக்குக், குறிப்பாக இளம் பருவத்தினருக்கு, அவர்களின் டிஜிட்டல் செயல்களால் நிஜ உலகில் ஏற்படும் தாக்கம் குறித்த ஒரு யதார்த்தமானக் கண்ணோட்டத்தை வழங்குகிறது.

எளிதான ஸ்ட்ரீமிங் மற்றும் முடிவற்றப் பொழுதுபோக்கை வழங்கும், இப்போது ரிம49.99* இலிருந்துக் கிடைக்கும் அதிக மதிப்புடைய ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகளை அனுபவிக்க வாடிக்கையாளர்களை ஆஸ்ட்ரோ அழைக்கிறது.

ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் astro.com.my அணுகலாம் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பலாம். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.