சுங்கை புசார், ஜூலை 19-
தன்னை புகழ்ந்து பேசியதற்காக ரபிசி ரம்லியை ரொட்டிச் சானாயும் தே தாரிவும் சாப்பிட அழைத்துள்ளார் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவரான டத்தோ ஜமால் முகமட் யூனுஸ்.
அம்னோ இளைஞர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி தமக்கு இருப்பதாக ரபிஸி கூறியிருந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் ஜமால் கூறினார். ஜமால் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவருக்காகப் பரப்புரை செய்யவும் தயார் என்று ரபிஸி குறிப்பிட்டிருந்தார்.
ரபிஸிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ரொட்டி, தே தாரிக் வாங்கிக் கொடுப்பதன்வழி அதை வெளிப்படுத்த விரும்புகிறேன் என ஜமால் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சொல்வது உண்மையென்றால் நான் சொல்வதும் உண்மைதான். அவர் எப்போது ஓய்வாக இருக்கிறாரோ அப்போது பாண்டான் சென்று அவருடன் உணவருந்த நான் தயார், என ஜமால் குறிப்பிட்டார்.


