Homeமலேசியாஇந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் சக்தி கட்சியின் பேராளர்களுக்கு சிறப்பு வரவேற்பு!

இந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் சக்தி கட்சியின் பேராளர்களுக்கு சிறப்பு வரவேற்பு!

புது டெல்லி, நவ.20-
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தலைமையில் அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருக்கும் அக்கட்சியின் பேராளர்களுக்கு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

டத்தோஸ்ரீ தனேந்திரனையும் அவரது கட்சியின் பேராளர்களையும் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரான டாக்டர் சசிகலா புஸ்பா, நாடாளுமன்ற தலைமை ஆலோசகர் டாக்டர் ராமசாமி ஆகிய இருவரும் வரவேற்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஏற்பாடு செய்த மதிய விருந்துபசரிப்பில் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு குறித்து பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், அவரது கட்சியின் பேராளர்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிப்பதாக சசிகலா புஸ்பா தெரிவித்தார். இச்சந்திப்பை தொடர்ந்து, புது டெல்லியில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் டத்தோஸ்ரீ தனேந்திரனும் மலேசிய பேராளர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more