Homeவிளையாட்டுபிரீமியர் லீக் - ஸ்டோக் சிட்டியுடன் சமநிலைக் கண்டது பிரைடன்!

பிரீமியர் லீக் – ஸ்டோக் சிட்டியுடன் சமநிலைக் கண்டது பிரைடன்!

லண்டன், நவ.21 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டோக் சிட்டி 2 – 2 என்ற கோல்களில் பிரைடன் அணியுடன் சமநிலைக் கண்டது. இந்த ஆட்டத்தில் இரண்டு முறை பின் தங்கியிருந்த பிரைடன் அணி இறுதியில் சமநிலைக் கண்டுள்ளது.

28 ஆவது நிமிடத்தில் ஷெர்டான் சக்கிரி கொடுத்த பந்தை சோப்போ மோத்திங் கோலாக்கினார் .எனினும் 44 ஆவது நிமிடத்தில் குரோஸ் அடித்த கோலின் மூலம் பிரைடன் ஆட்டத்தை சமப்படுத்தியது.

முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் கோர்ட் சூமா போட்ட கோலினால் ஸ்டோக் சிட்டி 2 – 1 என முன்னணி வகித்தது. எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இஸ்குவேர்டோ போட்ட கோலின் மூலம் பிரைடன் ஆட்டத்தை சமப்படுத்தியது.

இந்த பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பிரைடன் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.

spot_img

latest articles

explore more