நாளை யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகள் வெளியாகின்றது!

0
9

கோலாலம்பூர், நவ.22-

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர். தேர்வை கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி 4 நாட்களுக்கு தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த 13,600 மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்த தேர்வின் முடிவுகள் நாளை வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.

இது குறித்து யூ.பி.எஸ்.ஆர். தேர்வு எழுதிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தொடக்கப்பள்ளியில் அவர்கள் எதிர்நோக்கும் முதல் அரசாங்கத் தேர்வு யூ.பி.எஸ் ஆர் தேர்வாகும். கடந்த செப்டம்பர் 5ஆம் நாள் தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற யு.பி.எஸ்.ஆர் தேர்வில் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த 13,650 மாணவர்கள் தேர்வினை எழுதியுள்ளனர். இத்தேர்வின் முடிவுகள் நாளை 23 நவம்பர் 2017-ம் தேதி கல்வி அமைச்சினால் வெளியிடப்படவிருக்கின்றது.

இவ்வேளையில் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமாந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் அடுத்த ஆண்டு இடைநிலைப்பள்ளியில் சிறப்பாக உங்கள் கல்வியைத் தொடர
என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தமதறிக்கையில் அவர் கூறினார்.