Homeசமூகம்

சமூகம்

ஈப்போ ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் முதன்முறையாக இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

ஈப்போ: பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், ஈப்போ ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வரும் நவம்பர் 22ஆம் தேதி முதன்முறையாக மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. கிந்தா ரோட்டரி கிளப் , ஜெலாப்பாங் ஸ்ரீ மாரியம்மன் கோயில் மற்றும் ஜெலாப்பாங் ருக்குன் தெத்தாங்கா ஆகியவற்றின் ஏற்பாட்டில், கிந்தா மாவட்டச் சுகாதார அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இம்முகாம்...

இந்தியப் பெண்கள், இந்து மதம் குறித்துச் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு: எம்சிஎம்சியிடம் புகார் அளித்தது மலேசிய இந்துதர்ம மாமன்றம்

கோலாலம்பூர்: இந்தியச் சமூகத்தையும் இந்து மதத்தையும் குறிவைத்து முகநூலில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) புகார் அளித்துள்ளதாக மலேசிய இந்துதர்ம மாமன்றத் தலைவர் ரிஷிக்குமார் வடிவேலு தெரிவித்துள்ளார். 'Sahabat GARAP' என்ற முகநூல் கணக்கில் வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், சட்டவிரோதக் கோயில்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்வது...

வெள்ளத்தால் தவித்த 1,500 குடும்பங்களுக்கு 10 லட்சம் ரிங்கிட் நிவாரணம்: சுங்கை பூலோ மக்களின் நிஜ ‘ஹீரோ’ ஆன அமைச்சர் ரமணன்!

சுங்கை பூலோ, நவம்பர் 14: தொடர்ந்து பதினாறு நாட்கள்... வீட்டைச் சுற்றி பெருக்கெடுத்த வெள்ள நீர், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சகதி, அன்றாடம் கஷ்டப்பட்டு சேர்த்தெடுத்தப் பொருட்களெல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, செய்வதறியாது விழி பிதுங்கி நின்றார்கள் சுங்கை பூலோ மக்கள். அந்தச் சோகத்தின் வடு இன்னும் உலராத வேளையில், தங்களது கண்ணீரைத் துடைக்க யாராவது வருவார்களா என்று ஏங்கித் தவித்த அந்த...

இரண்டாம் நிலை நகரங்களுக்கான காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டும்: ங்கா கோர் மிங்

அந்தால்யா, நவம்பர் 13: வெள்ளம், நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க, இரண்டாம் நிலை மற்றும் இடைநிலை நகரங்களுக்கான காலநிலை நிதி வசதிகளை அதிகரிப்பதுடன், காலநிலையைத் தாங்கக்கூடிய வீடமைப்புத் திட்டங்களில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சரும் ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புத் திட்ட (UN-Habitat)...

ஊழல் குற்றவாளியால் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம்; தண்டனை பெற்ற அனைவருக்கும் வீட்டுக்காவல் வழங்கப்படுமா?: யுனேஸ்வரன் கேள்வி

கோலாலம்பூர்: நாட்டின் உயர்மட்டப் பதவிகளை வகித்த ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும்போது, அதன் பாதிப்பு நீதிமன்றத்துடன் முடிந்துவிடுவதில்லை; மாறாக, அது ஒட்டுமொத்த நாட்டின் நற்பெயர், நம்பகத்தன்மை மற்றும் நிர்வாக நேர்மைக்கும் கலங்கம் ஏற்படுத்தும் என்று தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார். ஊழல் என்பது வெறுமனே பணம் கையாடல் செய்வது மட்டுமல்ல. அது நாட்டின் சர்வதேச நம்பிக்கையையும் பாதிக்கும்...

பேராக் மாநில தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; பொதுமக்களுக்கு டத்தோ சிவநேசன் அழைப்பு!

ஈப்போ: பேராக் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி வரும் நவம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஈப்போ, இண்டேரா மூலியா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கடந்த காலங்களைப் போலவே, பல இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடுவார்கள் என மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரங்கள்...