கோலாலம்பூர், மே 15-
கடந்த 14-வது பொது தேர்தலில் அதிகமான மக்கள் மாற்றத்தை விரும்பி பக்காத்தான் ஹராப்பான் அரசங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். ஜனநாயக முறைப்படி மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ”மைக்கி” என்றும் மதிக்கும்.
அந்த வகையில் கடந்த மே 9-ஆம் திகதி நடைபெற்ற 14-வது பொது தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்த பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் நமது நாட்டின் 7ஆ-வது பிரதமராக பதவியேற்றிருக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதாக மைக்கியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன், நிர்வாக குழு மற்றும் மைக்கியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
1950-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மைக்கி 14 மாநில சம்மேளனம், இந்திய மற்றும் இந்திய முஸ்லீம் வர்த்தகச் சங்கங்களின் கூட்டமைப்பில் செயல்பட்டுவரும் ஒரு சம்மேளனம். தொழில்முனைவர்களின் தேவைகளுக்கு ஏற்ப மைக்கியின் நடவடிக்கை கொள்கைகள் இருந்து வருகிறது. அவை புதிய வர்த்தகர்களுக்கு உள்ள வாய்ப்புகளை எடுத்துரைப்பது, தொழில் சார்ந்த ஆலோசனை, பயிற்சிகள் மற்றும் இந்திய வர்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்து அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு சேர்ப்பது போன்றனவாகும்.
புதிய அரசாங்கத்துடன் கைகோர்த்து, முன்னோக்கி, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களின் தலைமைத்துவத்தில் மைக்கி இணைந்து செயல்படும். அதுமட்டுமின்றி மைக்கி தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி இந்த நாட்டின் பொருளாதார மேன்மைக்கும் ,வர்த்தகம் தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும். பிரதமருடனும், அமைச்சுடனும் தொடந்து பல கலந்துரையாடல்களில் மைக்கி ஈடுபட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பைச் செய்யும் .
அதுமட்டுமின்றி மைக்கி புதிய அரசாங்கத்துடன் அணுக்கமான உறவை வலுப்படுத்தி நாட்டின் பொருளாதர முன்னேற்றத்திலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பிலும் கவனம் செலுத்தி, மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுச் சென்று அதற்கு தீர்வு காணும் முயற்சியிலும் ஈடுபடும். இந்திய வர்த்தகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஒர் உறவு பாலமாக இருக்கும் மைக்கி, முன்னோக்கி சென்று அரசாங்கத்துடன் ஒத்துழைக்க தயார் எந்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கும் மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களுக்கும் மைக்கியின் தேசிய தலைவர் ,மைக்கி நிர்வாக குழு மற்றும் உறுப்பினர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


