புத்ரா ஜெயா, மார்ச் 2-
2018ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் மார்ச் 11இல் வெளியிடப்படும் என்று மலேசிய தேர்வு மன்றம் தெரிவித்தது.
மாணவர்கள் அன்றைய தினம் நண்பகல் மணி 12.00 முதல் தங்களின் பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மலேசிய தேர்வு மன்றம் அறிக்கை ஒன்றின் வழி இன்று குறிப்பிட்டது.
தனிப்பட்ட முறையில் இத்தேர்வை எழுதிய மாணவர்கள் தபால் வாயிலாக தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று அவ்வறிக்கை மேலும் விவரித்தது.
கடந்தாண்டு நாடு முழுமையும் 677 மையங்களில் 42,849 மாணவர்கள் எஸ்டிபிஎம் தேர்வு எழுதினர்.





