Homeஅரசியல்நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடருமா? அடாம் பாபா

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடருமா? அடாம் பாபா

புத்ராஜெயா, மே. 9
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா அல்லது மீட்டுக்கொள்ளப்படுமா என்பதை தீர்மானிப்பதர்கு முன் கோவிட்-19 தொற்றின் அண்மைய நிலவரம் குறித்து அரசாங்கம் ஆராயும்.

உலக சுகாதார நிறுவனம் வரைந்துள்ள அளவுகோலுக்கு ஏற்ப அதன் ஆலோசனையையும் பின்பற்றுவதோடு திடீரென நேர்வுகல் அதிகரித்தால் அதனை எதிர்நோக்குவதற்கும் நம்மைத் தயார் படுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா தெரிவித்தார்.

புதிதாக அத்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் கட்டுமானம், உற்பத்தித் துறைகளில் பணி புரியும் வெளிநாட்டினரும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவர்களும் என அவர் விவரித்தார். பொது மக்கள் விதிகளுக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் அனைத்து நடைமுறைகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

spot_img

latest articles

explore more