Homeகுற்றவியல்தீவிர கண்காணிப்பில் பெர்லிஸ்

தீவிர கண்காணிப்பில் பெர்லிஸ்

கங்கார், மே. 9-

பெர்லிஸ் கங்காரில் விதிகளூக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலம் முழுவதும் காவல்துறை காவல் சுற்று நடவடிக்கைகலைக் கடுமையாக்கவுள்ளது.

கள்ளத் தனமாக நாட்டிற்குள் கடம்ப இலைகளைக் (DAUN KETUM) கொண்டுவந்து அதனை மற்ற நாடுகளுக்குக் கடத்தும் நடவடிக்கையை முறியடிக்க பத்தாஸ்பான் உட்பட அனைத்து வழிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பெர்லிஸ் மாநிலக் காவல்துரை தலைவர் டத்தோ ஸுரினா சஆட் தெரிவித்தார்.

கங்காரில் ஏறத்தாழ 49 குறுக்கு வழிகள், பாடாங் பெசாரில் 13, ஆராவில் 5 பாதைகள் இருப்பதால் கடத்தல்கார்கள் எளிதில் நுழையவோ தப்பிக்கவோ வாய்ப்பளிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

கடந்த மாதம் முதல் நாள் தொடங்கி இம்மாதம் வரையில் ரி.ம. 472,000 மதிப்புள்ளா 8.4 டன் கடம்ப இலை கைப்பற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

spot_img

latest articles

explore more