கெப்போங் | 12/8/2021 :-
கடந்த அறிவிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவித் திட்டத்தில் 500 பள்ளிகளுக்கு 150,000 மடிக்கணினிகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அது குறித்து ஜ.செ.க.வின் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது வரையில் கெப்போங் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அமைப்புகல், நிறுவனங்கல், பொது மக்கள் ஆகியோரிடமிருந்து தான் உதவிகள் கிடைக்கப்பெற்று வந்தன.
அரசாங்கத்தின் கீழ் இருக்கும் அமைப்புதான் பள்ளிக்கூடங்கள். ஆனால், அவற்றுக்குத் தேவையானவற்றை அப்பள்ளிகளே தேடிக் கொள்ள வேண்டியச் சூழலில் இருக்கின்றன.
தருவதாக அறிவிக்கப்பட்ட மடிக்கணிகள் இது வரையில் கிடைக்கபெறவில்லை, மலேசியப் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக அமைச்சர் உண்மையாகவே மிகவும் கவனமாகச் செயல்படுகிறாரா என லிம் கேள்விகளைத் தொடுத்துள்ளார்.
மேலும், நாடு பெருந்தொற்றஒச் சந்தித்து இரண்டு ஆண்டுகள் நிறாஇவடையப் போகிறது எனவும், ஆனால், கல்வி தொடர்பான எந்தவிதக் குறிப்பிட்டத் திட்டமிடலையும் இதுவரை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
கல்வித் துறைக்கு இன்னும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக நேரடிக் கற்றல் கற்பித்தல் முறையில் இருந்து இல்லிருப்பில் இயங்கலைக் கற்றல் கற்பித்தல் முறைக்கு மாற்றம் கண்டிருக்கும் விவகாரத்தில் மூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கப்பட வேண்டும்.
ஆனால், தேசியக் கூட்டணி அரசாங்க நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘வாங்க’வும் மோசமான அரசியல்வாதியை அமைச்சர் பதவியில் அமர வைப்பதற்லும் பயன்படுத்துகிறது என லிம் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் Tabung Cerdik வாயிலாக ரி.ம. 150 மில்லியன் ஒதுக்கப்பட்டு அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் (GLC) அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்களுக்கும் (GLIC) அதனை வழங்கி கல்வி தொடர்பான உதவித் திட்டங்கள் வெற்றோயடையச் செய்யும் என அறிவித்திருந்தது.


