Homeஅரசியல்அன்வார் தவறாகக் கூறியுள்ளார் ! பெரும்பான்மையை முடிவு செய்வது மக்களவைத் தலைவரின் வேலை அல்ல !

அன்வார் தவறாகக் கூறியுள்ளார் ! பெரும்பான்மையை முடிவு செய்வது மக்களவைத் தலைவரின் வேலை அல்ல !

கோலாலம்பூர் | 2/8/2021 :-

மக்களவைத் தலைவர் அஸார் அஸிஸான் ஹாருன் அப்பதவியை வகிக்கத் தகுதி இல்லாதவர் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை எரிசக்தி – இயற்கை வளத் துறை துணை அமைச்சர் அலி பிஜு எதிர்த்துள்ளார்.

அம்னோவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அவர் இழந்து விட்டதைத் தெரிவிப்பதில் மக்களவைத் தலைவர் அஸார் தோல்வி அடைந்து விட்டதாக அன்வார் கூறியிருந்தார்.

இதன் தொடர்பில் கருத்துரைத்த அலி, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரதமர் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதனைத் தெரிவிக்க மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டவிதி 43 (4)இன் படி, மக்களவையில் பெரும்பான்மையைத் தாம் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதனை பிரதமரே உறுதி செய்வார் என அலி தெரிவித்தார்.

ஒரு வேளை, பிரதமர் பெரும்பான்மையைக் கொண்டிருப்பது குறித்து மக்களவைத் தலைவர்ர் அறிவித்தால், அது தமது அதிகாரத்திற்கு அவர்ர் செயல்பட்டதாகப் பொருள்படும் என அலி சொன்னார்.

பெரும்பான்மையை அரசாங்கம் இழந்து விட்டதை அஸார் மூடி மறைக்க முயற்சிப்பதாக அன்வார் கூறிதை நேற்று THE VIBES செய்தியில் வெளியிடப்பட்டது.

முன்னாள் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக இருந்த அலி, அரசியல் அமைப்புச் சட்டத்தை அன்வார் புறக்கணிப்பதாகக் கூறினார்.

பல்லாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் அன்வாருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் தெரியாதது அவமானமாக உள்ளது எனவும் நாடாளுமன்றத்தையும் அதன் தலைவரையும் தாக்குவதோடு மக்களாஇக் குழப்புகிறார் எனவும் அலி சாடினார்.

அன்வார் தீய எண்ணத்தோடு அவ்வாறு தாக்கிப் பேசியதாகவும் பிரதமராகும் நோக்கத்தோடு இஆரு நடந்து கொள்வதாகவும் அலி கூறினார்.

அடுத்த மாதம் 7 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கயில்லா வாக்கெடுப்பு நடத்த பிரதமர் முடிவு செய்திருப்பதை அன்வாருக்கு அலொ நினைவுப்படுத்தினார்.

15 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிட்ரதமர் மகியாதீனுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட வேளையில் 23 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், தற்போது 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகின்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் குறைந்தது 11 பேரின் ஆதரவு தேவைப்படுகிறது.

spot_img

latest articles

explore more