Homeஅரசியல்நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஒருவரே ! – அன்வார் இபுராகிம்

நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஒருவரே ! – அன்வார் இபுராகிம்

கோலாலம்பூர் | 13/8/2021 :-

குழப்பங்களைத் தவிர்க்க நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் அதன் சார்பாக ஒரே ஒரு பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இபுராகிம் வலியுறுத்தியுள்ளார்.

நெகிரி செம்பிலான் போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி சேவை மையத்தில் உணவுக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார் இபுராகிம் அவ்வாறு கூறினார்.

முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமராக தான் ஶ்ரீ மகியாதினுக்குப் பதிலாக அம்வாரை அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என வளியுறுத்தியது.

மேலும், நம்பிக்கைக் கூட்டணியின் அந்த முடிவுக்கு இதர தரப்பினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்காவிட்டால் அது வீண் முயற்சியாகி விடும் என அன்வார் கூறினார்.

spot_img

latest articles

explore more