கோலாலம்பூர் | 16/8/2021 :-
மலேசியாவின் எட்டாவது பிரதமராக இருந்த தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் அம்னோவின் சில நாடாளுமன்ற உறுப்பின்பர்களின் ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்பு பெரும்பான்மையை இழந்த அவர் பதவி விலகினார்.
அவரது பதவி விலகலுக்குப் பிறகு, மலேசியாவின் மிகவும் குறுகிய காலத்தில் பதவியில் இருந்தப் ப்ரதமராக இவர் திகழ்கிறார்.
தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினின் எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்து ஒரு கண்ணோட்டம் இடுவோம்.
• 1947
பிறப்பு : மே 15, முவார், ஜோகூர்
• 1971
மலாயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம், மலாய் ஆய்வியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அம்னோவின் பாகோ தொகுதியில் உறுப்பினராக இணைந்தார்.
• 1974
முவாரின் துணை மாவட்ட அதிகாரியானார். முன்னதாக, ஜோகூர் மாநில அரசாஙகத்தில் இரு துணைச் செயலாளராகப் பணியேற்றார்.
• 1978
மலேசியாவின் 5வது பொதுத் தேர்தலில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டு கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
• 1986
புக்கிட் செராம்பாங் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியின்றி வெற்றி பெற்று ஜோகூர் மாநிலத்தில் 13வது முதல்வரானார்.
• 1995
மீண்டும் தேசிய நிலையிலான அரசியல் களத்தில் இறங்கினார். இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரானார்.
• 1999
உள்நாட்டு வானிபம், பயனீட்டாளார் விவகாரத் துறை அமைச்சரானார்.
• 2004
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்துறை அமைச்சரானார்.
• 2008
அனைத்துலக வானிபம், தொழில்துறை அமைச்சர் பதவி ஏற்றார்.
• 2009
எப்ரலில் நஜிப் துன் இரசாக் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது துணைப் பிரதமர் பதவியேற்றார். அதே சமயம் கல்வி அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் அம்னோவின் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
• 2015
1MDB ஊழல் விவகாரம் மேலோங்கிய வேளையில், அமைச்சரவை மாற்றம் காணப்பட்டபோது துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
• 2016
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அம்னோவிருந்து நீக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் இணைந்து பெர்சத்து கட்சி உருவாக்கம் பெற்றது. கட்சியின் தோற்றுநராக துன் மகாடீரும் தலைவராக மகியாதீனும் பதவி வகித்தனர்.
• 2018
பிகேஆர், ஜ.செ.க., அமானாவுடன் பெர்சத்து இணைந்து நம்பிக்கைக் கூட்டணி உருவாக்கம் பெற்றது. 14வது பொதுத் தேர்தலைச் சந்தித்தனர்.
அதில் வெற்றி பெற்ற பிறகு, துன் மகாதீர் பிரதமர் ஆன வேளையில், மகியாதீன் உள்ய்துறை அமைச்சரானார்.
• 2020
பிப்பரவரி 24 ஆம் நாள், துன் மகாதீர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர், தமது பதவியை மகியாதீன் கைவிட்டார். இதனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
பெர்சத்து கட்சியின் தலைவரான மகியாதீன், நம்பிக்கைக் கூட்டணியில் இருந்து விலக்கி, அம்னோ, பாஸ், ஜிபிஎஸ் கட்சிகளுடன் இணைந்து புதியக் கூட்டணியை உறுவாக்கினார்.
ஷெரட்டன் நகர்வின் காரணமாக நாட்டின் எட்டாவது பிரதமராக மகியாதீன் மார்ச் 1 ஆம் நாள் பதவியேற்றார்.
மார்ச் 17 ஆம் நாள், தேசிய முன்னணி கூட்டணி, ஜிபிஎஸ், பிபிஎஸ், ஸ்டார் ஆகியக் கட்சிகளுடன் இணைந்து நாட்டின் ஆட்சி பீடத்தில் அமைச்சரவைக்காக தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டது. தேசிய முன்னணி கூட்டணி, ஜிபிஎஸ், பிபிஎஸ் ஆகியன இன்றி ஆகஸ்ட் 7 ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு பெற்றது.
சபா மாநில இடைத் தேர்தல் செப்டம்பர் 26 ஆம் நாள் நடைபெற்றது. பெர்சத்து, அம்னோ, பிபிஎஸ் ஆகியக் கட்சிகளின் கூட்டணி முயற்சியால் வாரிசானைத் தோற்கடித்து சபா ஆட்சியைக் கைப்பற்றியது.
சபாவை பெர்சத்து முதன்மையாக இருந்து வழி நடத்த அம்னோ – பெர்சத்து இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனிடயே, அம்னோவின் சூழ்ச்சியால் பேரா மாநில முதல்வராக இருந்த அகமாட் ஃபைஸால் அஸுமு அப்பதவி விலகக் காரணமாக அமைந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் பெர்சத்து கட்சித் தேர்தலின்போது அதன் அதலைவராகப் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
• 2021
அரசாங்கத்தில் சில அழுத்தங்கள் அதிகரிக்க, தேசியக் கூட்டணி – மகியாதீனுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டது.
சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறாஇயில் நேரடியாக தேசியக் கூட்டணி – பிரதமர் மகியாதீனுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டனர். மேலும், அம்னோவின் இரு அமைச்சர்கள் தங்களின் பதவியைத் துறந்தனர். இதனால், பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலக மகியாதீனுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
• ஆகஸ்ட் 16, 2021
தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.


