Homeஅரசியல்அம்னோ தலைமையிலான மாநில அரசாங்காத்தை ஜோகூர் - பேரா பெர்சத்து கட்சி ஆதரிக்கின்றன !

அம்னோ தலைமையிலான மாநில அரசாங்காத்தை ஜோகூர் – பேரா பெர்சத்து கட்சி ஆதரிக்கின்றன !

கோலாலம்பூர் | 16/8/2021 :-

தேசிய நிலையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் தோல்வி கண்டு பதவி விலகியிருக்கின்ற நிலையில், மாநில அளவிலான தேசியக் கூட்டணி அரசாங்கங்கள் பக்கம் தற்போது கவனம் திரும்பியுள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை அம்னோ தலைமையேற்று வருகிறது. மாநில தேசியக் கூட்டணி ஆட்சிக்கு ஜோகூர் பெர்சத்து கட்சி தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது.

இவ்விவரத்தை அம்மாநில பெர்சத்து கட்சியின் செயலாளர் டாக்டர் சாருடின் ஜமால் உறுதிப்படுத்தியுள்ளார். அதன் 12 சட்டமன்ற உறுப்பினர்களையும் உட்படுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜோகூர் மாநிலத்தில் அம்னோ 14 சட்டமன்றங்களும், தான் ஶ்ரீ மகியாதீனின் கம்பிர் சட்டமன்றத்தைச் சேர்த்து பெர்சத்து 12 சட்டமன்றங்களும், ம.இ.கா. 2 சட்டமன்றங்களும், பாஸ் 1 சட்டமன்றத்தையும் கொண்டுள்ளன. அதே சமயம் எதிர்க்கட்சி வரிசையில் ஜ.செ.க. 14 சட்டமன்றங்களும், அமானா 6 சட்டமன்றங்களும்வ் பிகேஆர் 7 சட்டமன்றங்களும் கொண்டுள்ளன.

கடமை தவறாத பொறுப்புணர்ச்சி மிக்க ஜோகூர் மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மட்டைத் தமது தரப்பு முழுமையாக ஆதரிப்பதாக டாக்டர் சாருடின் தெரிவித்தார்.

இதனிடையே, பேரா மாநிலத்தில் தேசியக் கூட்டணி ஆட்சியில் அம்னோ தலைமையெற்று நடத்தி வருகிறது. அங்கும் பேரா மாநில தேசியக் கூட்டணியை அம்மாநில பெர்சத்து கட்சி ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரா மாநில பெர்சத்துவின் தகவல் பிரிவுத் தலைவர் கடீர் மைடென் உசேன் இது குறித்து தெரிவிக்கயில், தற்போதையச் சூழலில் அம்னோ தலைமையேற்றிருக்கும் பேரா மாநில தேசியக் கூட்டணி ஆட்சியை ஆதரிப்பதாகவும் அதே வேளையில் தேசிய நிலையில் பெர்சத்து கட்சியின் நிலைப்பாட்டைப் பொறுத்தும் அது அமையலாம் என அவர் சொன்னார்.

இது குறித்து மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் அகமாட் ஃபைஸால் அஸுமுவை மிக விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் கடீர் மைடென் உசேன் தெரிவித்தார்.

கடந்த திசம்பர் மாதம், தேசிய முன்னணியின் 26 சட்டமன்றங்கள், பெர்சத்துவின் 6 சட்டமன்றங்கள், பாஸ்-இன் 3 சட்டமன்றங்கள், ஆகியவற்றைக் கொண்டு அம்னோவின் சராணி முகம்மட்டின் தலைமையில் தேசியக் கூட்டணி ஆட்சி  அமைக்கப்பட்டது.

எதிர்க்கட்சி வரிசையில், ஜ.செ.க. 15 சட்டமன்றங்கள், அமானா 5 சட்டமன்றங்கள், பிகேஆர் 3 சட்டமன்றங்கள், சுயேட்சையாக 1 சட்டமன்றம் உள்ளன.

spot_img

latest articles

explore more