Homeஅரசியல்அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக நாட்டை வழிநடத்த வேண்டும் என மாமன்னர் அறிவுறுத்தினார் ! – அன்வார்...

அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக நாட்டை வழிநடத்த வேண்டும் என மாமன்னர் அறிவுறுத்தினார் ! – அன்வார் இபுராகிம்

கோலாலம்பூர் | 17/8/2021 :-

அனைத்து கட்சிகளும் பழைய அரசியலைக் கைவிட்டுப் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என மாமன்னர் அறிவுறுத்தியதாக அன்வார் இபுராகிம் தெரிவித்தார்.

அரண்மனையில் மாமன்னரைச் சந்தித்த பின்னர் அன்வார் இபிராகிம் ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு கூறினார்.

நாடு தற்பொழுது சுகாதார, பொருளாதார, அரசியல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனை ஒன்றிணைந்து கையாள வேண்டும் என மாமன்னர் கூறியதாக அன்வார் தெரிவித்தார்,

அதாவது, வெற்றி பெற்றவர்கள் முந்தையத் தவறுகளைச் செய்யக் கூடாது என அவர் கூறியதாக அன்வார் சொன்னார்.

இன்று மாமன்னரை அரசியல் கட்சிகளீன் தலைவர்கள் சந்தித்தபோது, அவர்கள் தங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் மாமன்னரிடம் முன் வைத்ததாக அன்வார் கூறினார்.

புதிய பிரதமர் நியமனம் குறித்து மட்டும் விவாதிக்காமல், நாட்டு மக்களின் நலனுக்காகவும் அமைதிக்காகவும் பழைய அரசியலைக் கைவிட்டு புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என மாமன்னர் சொன்னதாக அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more