பெட்டாலிங் ஜெயா | 17/8/2021 :–
நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால், கடந்தப் பொதுத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா நினைவுறுத்தியுள்ளார்.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த் எட்மண்ட் சந்தாரா, தேசியக் கூட்டணிக்குத் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார். கடந்த பொதுத் தேர்தலின் போது இந்தியர்களுக்கெனக் குறிப்பிட்டு வழங்கப்பட்ட 25 வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்பு போலவே நிதிப்பற்றாக் குறையைக் காரணம் காட்டி தட்டிக் கழிக்க வேண்டாம் எனக் கூறினார். ‘
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிகாலத்தில் அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளில் 15க்கும் மேற்பட்டவை நிறைவேற்ற நிதி தேவையில்லை; மனம் இருந்தால் மட்டுமே போது என அவர் தெரிவித்தார்.
மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வரும் நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றும் கடமையை மறந்து விட மாட்டார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணி ஆளும் கட்சியாகும் நிலையில் தாம் எதிர்க்கட்சியாக வீற்றிருக்கப்போவதாகவும் கூறிய எட்மண்ட் சந்தாரா, தமது ஆதரவு என்றுமே தேசியக் கூட்டணிக்கு என சொன்னார்.


