கோலாலம்பூர் | 18/8/2021 :-
பிரதமர் வேட்பாளராக அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தேர்தெடுக்கப்பட பாஸ் கட்சி ஒரு மனதாக ஆதரவு வழங்கியுள்ளது என இன்று வெளியிட்ட அற்இக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இது குறித்து தகவலளிக்கும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே ஒப்புதல் கடிதத்தோடு அக்கட்சி தயாராக இருப்பதாகக் கூறினார்.
முன்னதாக, இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அம்னோ ஒருமனதாக தேர்தெடுத்துள்ளது எனத் தகவல் வெளியிடப்பட்டது.


