கோலாலம்பூர் | 18/8/2021 :-
அமைக்கப்பட இருகும் புதிய அரசாங்கத்தில் மதியுரை அமைச்சர் எனும் பதவியில் மகியாதீன் முகம்மது யாசின் நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிற வேளையில், அது தேசியக் கூட்டணி 2.0 பிம்பத்தை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி தெரிவித்துள்ளார்.
எனவே, அந்தப் பதவி வேண்டாம் எனவும் முழுமையானப் புதிய அரசாங்கமாக ஒற்றுமையான அரசாங்கமாக இருக்க வே அவர் கூறியுள்ளார்.
பிரதமராக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நியமிக்கப்படுகின்ற நிலையில் மதியுரை அமைச்சராக தான் ஶ்ரீ மகியாதீன் மிகம்மது யாசின் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டத்தில் ஆருடம் வலுத்து வருகிறது.
இஸ்மாயில் சப்ரிக்குப் போதுமானப் பெரும்பான்மை ஆரதவு இருப்பதாகக் கூறப்பட்டு வருவதைத் தொடர்ந்து அந்த மதியுரை அமைச்சர் பதவியில் மகியாதீன் முகம்மது யாசின் நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
புதிதாக அமைக்கப்பட இருக்கும் அரசாங்கம் ஒற்றூமையை முன்னிறுத்தியதாக இருக்க வேண்டும் எனத் தமது முகநூல் பக்கத்தில் புவாட் பதிவிட்டுள்ளார்.
தற்போது நாடு சந்தித்திருக்கும் அரசியல் நெருக்கடியை மாமன்னர் முறையாகவும் சிறப்பாகவும் கையாள்கிறார். நியமிக்கப்பட இருக்கும் புதிய பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தில் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறாரா என உறுதி செய்ய வேண்டும் என மாமன்னர் ஆணையிட்டுள்ளதாக புவாட் மேலும் தெரிவித்தார்.


