spot_img
10.9 C
London
spot_img
Home மலேசியா கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம்-மித்ரா தலைமை இயக்குனர் சந்திப்பு!

கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம்-மித்ரா தலைமை இயக்குனர் சந்திப்பு!

0
278

புத்ராஜெயா, ஜூன் 5-

2024-2026 ஆண்டுக்கான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் பொறுப்பாளர்கள் மலேசிய உருமாற்று பிரிவின் (மித்ரா) தலைமை இயக்குனர் ரவிக்குமார் சுப்பையாவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இச்சந்திப்பில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன், துணைத் தலைவர் பிரபாகரன் வைத்தியலிங்கம், பொதுச் செயலாளர் மோகனா சின்னதம்பி, துணை பொதுச் செயலாளர் டோனி கிலிஃபர்ட், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சண்முக செல்வி ராஜகோபால், டாக்டர் விஸ்வநாதன், செல்வராஜு, ஹரிகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மித்ரா சார்பில் அதன் தலைமை இயக்குநர், பொருளாதார மற்றும் தொழில் பிரிவு துணை இயக்குநர் தினேஷ் குமார் மற்றும் தொழில் மற்றும் பொருளாதார பிரிவு ஒருங்கிணைப்பாளர் யோகேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றனர்.

இச்சந்திப்பின் போது இந்திய சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் 100 மில்லியன் வெள்ளி நிதி தொடர்பில் மித்ராவுடன் சங்கம் ஒத்துழைப்பு நல்குவது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது.

இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மித்ரா மேற்கொள்ளும் திட்டங்களுக்குச் சங்கம் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.