Homeசமூகம்சமூகம்சவால்களை எதிர்நோக்க தயாராவீர்! இடைநிலைப் பள்ளி செல்லும் தமிழ்ப்பள்ளி...

சவால்களை எதிர்நோக்க தயாராவீர்! இடைநிலைப் பள்ளி செல்லும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்து

பத்துமலை , நவ 21 –

ஆறு ஆண்டு காலம் தமிழ்ப்பள்ளியில் பயின்று அடுத்த ஆண்டு இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்கள் புதிய சூழ்நிலையை எதிர்நோக்கத்   தயாராக இருக்க வேண்டும் என கிள்ளான் ஏ.சி.எஸ் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் டத்தோ டாக்டர் ஜெயப்பிரகாசம் மாயகிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

இந்த மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்து விளங்க வேண்டும்.

இடைநிலைப் பள்ளியில் புதிதாக காலடி வைக்கும் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களைப் பார்த்து வந்தவர்கள்.

இடைநிலைப் பள்ளியில் பல இனங்களையும் சேர்ந்த மாணவர்களுடன் பயிலும் மற்றும் பல இன ஆசிரியர்களுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையை சந்திக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்நோக்குவர். இதற்கு இவர்கள் தயாராய் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“நமது மாணவர்கள் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது. உங்களுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கல்வி பயிலவிருக்கும் மாணவர்களும் உங்களைப் போலவே முதல் ஆறு ஆண்டுகள் தேசிய மற்றும் சீனப் பள்ளியில் இருந்த மாணவர்கள்தான் “.

“எனவே அவர்களும் உங்களைப் போலவே தொடக்கப் பள்ளியில் பல்வேறு சவால்களை கடந்து வந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடக்கூடாது “என பத்துமலை தமிழ்ப் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களிடையே உரையாற்றியபோது டாக்டர் ஜெயப்பிரகாசம் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பத்துமலை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி, மாணவர் பொறுப்பாசிரியர் டாக்டர் விக்டர் மற்றும் இதர ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், டிஎல்பி வகுப்பை எப்படி தேர்வு செய்வது, நல்ல நண்பர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது மற்றும் நல்ல உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சிறந்த மனநிலையும், ஆன்மீக நிலையும் மிகவும் முக்கியம் என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும் என்றார்.

 

spot_img

latest articles

explore more