வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > வாப்ரீகாசுக்கு வலை வீசும் மொனாக்கோ !
விளையாட்டு

வாப்ரீகாசுக்கு வலை வீசும் மொனாக்கோ !

லண்டன், ஜன.2 –

செல்சியின் மத்திய திடல் ஆட்டக்காரர் செஸ் வாப்ரீகாசை வாங்க, பிரான்சின் மொனாக்கோ  திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் புதிய ஆட்டக்காரர்களை வாங்குவதற்கான சந்தை மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாப்ரீகாசை ஒப்பந்தம் செய்ய மொனாக்கோ எண்ணம் கொண்டுள்ளது.

செல்சியின் நிர்வாகியாக மவுரிசியோ சாரி பொறுப்பேற்றப் பின்னர், அந்த அணியின் மத்திய திடல் பகுதியில் வாப்ரீகாஸ் தனது இடத்தை இழந்துள்ளார். செல்சியுடனான வாப்ரீகாசின் ஒப்பந்தம் வரும் ஜூன் மாதம் முடிவடையவுள்ளது. இதனால் 32 வயதுடைய வாப்ரீகாசைக் , மொனாக்கோவுக்குக் கொண்டு வர அதன் நிர்வாகி தியேரி ஹென்ரி திட்டமிட்டுள்ளார்.

பிரான்ஸ் லீக் போட்டியில் 19 ஆவது இடத்தில் இருக்கும் மொனாக்கோ, தகுதி இறக்கம் காணும் நிலையில் இருந்து தப்பிக்க முயன்று வருகிறது. வாப்ரீகாசைத் தவிர செல்சியின் மற்றொரு ஆட்டக்காரரான காரி கேஹில்லையும் வாங்க, மொனாக்கோ திட்டமிட்டிருக்கிறது. இவர்களைத் தவிர அர்செனலின் லோரேன்ட் கொசியன்லி, ரியல் மாட்ரிட்டின் பெப்பேவும், ஹென்ரியின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.

வாப்ரீகாஸ், செல்சியை விட்டு வெளியேறும் பட்சத்தில் அதற்கு மாற்று ஆட்டக்காரரைக் கொண்டு வர செல்சி முயல வேண்டும் என மவுரிசியோ சாரி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.  தற்போது ஜார்கின்ஹோ விளையாடும் இடத்தில் அவருக்குப் பதில் விளையாடும் ஆற்றல் பெற்ற ஆட்டக்காரராக, வாப்ரீகாஸ் மட்டுமே இருக்கின்றார். வாப்ரீகாஸ் இல்லாத பட்சத்தில் மாற்று ஆட்டக்காரரைக் கொண்டு வருவது அவசியமாகிறது என அவர் மேலும் சொன்னார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன