அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > இப்போதைக்கு அரசியல் கிடையாது -நூருல் இசா திட்டவட்டம்
அரசியல்முதன்மைச் செய்திகள்

இப்போதைக்கு அரசியல் கிடையாது -நூருல் இசா திட்டவட்டம்

கோலாலம்பூர் பிப் 27-

தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவது மற்றும் சமூக பணிகளில் தமது நேரத்தை கவனம் செலுத்தி வருகிறார் நூருல் இசா அன்வார்.

பிகேஆர் உதவித் தலைவர் பதவி, பினாங்கு மாநில பிகேஆர்  தலைவர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக கடந்த டிசம்பர் மாதம் நூருல் இசா அதிர்ச்சிகரமான அறிவிப்பை செய்தார்.

சமூக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.  இப்போதைக்கு எனது தொகுதியில் கவனம்  செலுத்துவதை முதன்மைப் பணியாக கருதுகிறேன் .மேலும் அங்குள்ள கிராம மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதில் நான் தொடர்ந்து தீவிர முனைப்பு  காட்டுவேன் என இரு குழந்தைகளுக்குத் தாயான 38 வயதுடைய நூருல் இசா தெரிவித்தார்.

14வது பொதுத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் மனோபாவம் அல்லது மக்களின் கண்ணோட்டம் குறித்து கேட்டபோது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்தினார்.

மக்களுக்கான நமது திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இன்றி மக்களுக்கான நமது கொள்கைகள் அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன