முகப்பு > சமூகம் >  ‘அரசாங்க உயர்க்கல்விக் கூடமே நமது முதல் தேர்வு’;இந்திய மாணவர்கள் குவிந்தனர்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

 ‘அரசாங்க உயர்க்கல்விக் கூடமே நமது முதல் தேர்வு’;இந்திய மாணவர்கள் குவிந்தனர்!

ஈப்போ, மார்ச் 16-

நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள்  குறிப்பாக எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வினை எழுதிய  மாணவர்கள் மேற்கல்வியை மேற்கொள்ள சிறந்த முடிவினை எடுக்க நாடு முழுவதிலும்  வழிகாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

இதனை மலாயா பல்கலைக் கழக இந்திய பட்டதாரிகள் குழவினர்  (குமிட்) இலவசமா நடத்தி வருகிறது. அது ஏப்ரல் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இன்று இங்குள்ள சென். பிலோமினா தமிழ்ப்பள்ளியில் இப்பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர்  கரங்கள் மற்றும் நேசக்கரங்கள் இயக்கத்தின் பேராதரவுன்  நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஈப்போ  சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 450 மாணவர்கள கலந்துக் கொண்டனர்.

இந்தக கூட்டத்தை நாங்கள் எதிர்ப் பார்க்கவே இல்லை எனினும் இந்திய மாணவர்கள் தங்களின் எதிர்கால கல்வியை முடிவு செய்ய இந்தக் நிகழ்வில் தங்களின் பெற்றோர்களுடன் வருகை புரிந்தது மகிழ்ச்சியை அளிப்பதாக குமிட் குழுவின் ஒருங்கிணப்பாளர் ஆர். சிவமணி கூறினார் .

இந்த நாட்டில் மாணவர்கள் தங்களின் கல்வித் தகுதிற்கு ஏற்ப அரசாங்கத் துறை கல்விக் கழகங்களில் மேற்கொள்ள வாய்ப்புகள் நிறைய உள்ளது . இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு விளக்கங்களப் பெறலாம்.

பலர் முறையான ஆலோசனைகள் பெறமால் சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி கடன் பெற்று கல்வியை மேற்கொண்டு கல்வி முடித்து வேலைக் கிடைக்காமல் கடனையும் செலுத்த முடியாமல் இன்னமும் அவதியுற்று வரும் பலர் உள்ளனர் .

ஆக, நமது மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வழிகாட்டி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

இங்கு ஏற்பாடு செய்த நிழ்விற்கு பெரும் திரளானோர் கலந்துக்கொண்டுள்ளதைக் காணும்போது மாணவர்கள் சரியான கல்வியைத் தொடர ஆர்வத்தை மேற்கொண்டுள்ளதை காட்டுவதாக தெரிய வருகிறது. அதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் இங்கு இந்த நிகழ்வை ஏற்பாடுஙசெய்த அதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெயசீலன் தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன