சிரம்பான், மார்ச் 17-

மற்றவர்களுக்கு உதவக்கூடிய சிறந்த தொண்டு உள்ளம் படைத்தவராக டாக்டர் ஸ்ரீராம் இருப்பதால் அவரை ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நல்ல மனிதாபிமானம் மிக்க மனிதராக டாக்டர் ஸ்ரீராம் இருப்பதால்  மயக்க ஊசி நிபுணரான அவரை இடைத்தேர்தலுக்கு வேட்பாளராக தாம் தேர்வு செய்ததாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் உரிமை டாக்டர் ஸ்ரீராமுக்கு மறுக்கப்பட்டது கொடூரமான ஒரு நடவடிக்கையாகும்.  ..  ..

டாக்டர் ஸ்ரீராம் ஒரு இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்  ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவுவதற்காக அவர் இவ்விரு நாடுகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை வழங்கி இருக்கிறார் அப்படிப்பட்ட மனிதாபிமானமிக்க ஒருவரை ரந்தாவ் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தாம் கருதியதாக சுமார் 500 பேர் முன்னிலையில் உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.

போரினால்  காயமடைந்த இஸ்லாமிய மக்களுக்கு மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர் ஆப்கானிஸ்தான் சென்றார். அதேபோன்று சிரியாவிலும் காயமடைந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக தன்னார்வ அடிப்படையில் அவர் அங்கு சென்று பணியாற்றியிருக்கிறார்.

எனவேதான், டாக்டர் ஸ்ரீராமை மீண்டும் ரந்தாவ் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறேன் என அன்வார் கூறினார்