ஈப்போ மார்ச் 18-

பேராவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்சி மாற்றம் காணவிருப்பதாக நேற்று இரவு சமுக ஊடகங்களின் வழி வெளியான வீடியோ ஒளிப்பதிவு தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு தொடங்கி இன்று பிற்பகல் வரை ஆட்சி மாறுமா என்று எழுந்த கேள்விக்கு முற்று புள்ளிவைக்கப்பட்டது. அப்படியொரு சம்பவம் நிழந்ததிற்கான அறிகுறிகள் எதுவும் நிகழவில்லை .

மாநில அரசாங்கத்தில் பரபரப்பான சூழ் நிலை எதுவும் காணப்படவில்லை வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதற்கிடையில் மாநில அரசாங்க அலுவலகத்தில் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய செய்தியாளர்கள் கூட்டம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கத்திற்கு மாறாக அதிகமான அதிகமான செய்தியாளர்கள் குவிந்திருந்தனர். இக்கட்சியின் மாநில உதவித் தலைவரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான தான் காய் இங் தலைமையில் நடைபெற்ற இதில் உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாட் கலந்துக்கொண்டார்.

இதில் பேசிய தான் காய் இங் , சமீப காலமான மாநில எதிர்க்கட்சி தலைவர் டத்தோ சராணி முகமட், நம்பிக்கை கூட்டணி ஆட்சி கவிழப்போவதாக தொடர்ந்து அடிப்படையற்ற தகவல்களைப் பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

அதனை அவர் உடனடியாக நிறுத்தவேண்டும் தொடந்து இதுபோன்ற தகவல்களைப் பரப்பி மாநிலத்தில் குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதுபோன்ற குழப்பதினால் மாநிலத்தில் முதலீட்டாளர்களின் வருகை பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதைத் இம்மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முழு ஆதரவை வழங்குகிறார்கள் என்பதை உறுத்தினார்.

இதனிடையே தனது ஆதரவு நம்பிக்கை கூட்டணிக்கே அதில் எந்த மற்றமும் இல்லை என்று முகமட் அரப்பாட் தெரிவித்தார்