செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்!

கோலாலம்பூர், ஆக. 3-

பொது மக்கள் முன்னிலையில் எவ்வித அச்சமும் இன்றி தன்னம்பிக்கையுடன் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து இந்திய மகளிர் தொழில் முனைவர் மற்றும் தொழில் நிபுணர்கள் மேம்பாட்டிற்கான மலேசிய அமைப்பு ஏற்பாடு செய்த பயிற்சிப் பட்டறை பங்கேற்பாளர்களுக்கு புது உத்வேகத்தை அளித்ததாகக் கூறப்பட்டது.

சுய மேம்பாடு,  சுமூகமான தொடர்பு, தொழில் மேம்பாடு ஆகியவற்றிற்கு பேச்சாற்றல் மிக அவசியம் என்கிறார்  பேச்சாற்றல் பயிற்றுனரான  மேரி லூர்தஸ்.

காப்புறுதி, சொத்துடமை  உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள்  தங்களின்  அடுத்த கட்ட இலக்கை அடைவதற்கு இப்பயிற்சி   உறுதுணை புரிந்தது என்றால் மிகையாகாது.

பொது மக்கள் மத்தியில் பேசும்போது ஏற்படும் நடுக்கம், தயக்கம் போன்றவற்றைக் களைந்து மற்றவர்களைக்  கவரும் வகையில் தெளிவாகப் பேசும் வழிமுறைகள் குறித்து மேரி லூர்தஸ் பயிற்சியாளர்களுக்குக் கற்றுத் தந்தார்.

எல்லோர் முன்னிலையிலும் உரை நிகழ்த்தும்போது தடுமாற்றம் கொள்ளச் செய்வது பயமே. இதனைக் களைந்து தைரியமாகப் பேசுவதற்கு இந்தப் பயிற்சி முக்கிய தளமாக அமைந்தது  என்று இந்த அமைப்பின்  பேச்சாளர் கிளப் தலைவர் ஃபாவ்சியா பிபி குறிப்பிட்டார்.

ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற பட்டறையில் 35 பேர் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி தலைப்புகள் வழங்கப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டன. இவர்களில் சிறந்த மூவரை இவ்வங்கத்தில் நீதிபதியாகச் செயல்பட்ட  மேரி லூர்தஸ்  மற்றும் ஃபாவ்சியா பிபி இருவரும் தேர்ந்தெடுத்தனர்.

மாதந்தோறும் நடைபெறும் இந்தப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்களின் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள விரும்புவோர் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளன செயலவை உறுப்பினருமான  ஃபாவ்சியா பிபுயுடன் 016-3337860 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

3 thoughts on “சுய மேம்பாட்டிற்கு பேச்சாற்றல் மிக முக்கியம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன