கோலாலம்பூர், டிசம்பர் 9-

சீ விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பெண்கள் தனிநபர் பிரிவில் மலேசியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்று தந்த கிசோனாவுக்கு நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கு 45ஆவது தங்கப்பதக்கத்தை வென்று தந்திருக்கும் இவர் நாட்டிற்கு சமுதாயத்திற்கு பெருமைத் தேடித் தந்துள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் கிசோனா சிறந்த விளையாட்டாளராக திகழ்வார் என்றும் மேலும் இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமையைத் தேடித் தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

கிசோனாவை போன்று இளம் விளையாட்டாளர்களின் வெற்றி பயணம் இளம் தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்றும் அவர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

இன்று நடைப்பெற்ற பேட்மிண்டன் பெண்கள் தனிநபர் பிரிவுக்கான இறுதியாட்டத்தில் 20-22, 21-14, 21-13 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவின் ருசேலி ஹர்தாவானை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.