நடைமுறையை கண்காணிக்க ட்ரோன் சேவை!

கோலாலம்பூர், மே. 9-

விதிகளுக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறை (SOP) பின்பற்றப் படுவதைக் கண்காணிக்க தொலை இயக்கப் பறக்கும் கருவி – ட்ரோன் (DRONE) நவீன தொழில்நுட்பம் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வான்வெளியில் இருந்து பொதுமக்கள் கண்காணிக்காப்படுவதற்கு அவை பயன்படுத்தப்படுவதாக அரச மலேசியக் காவல்துறையின் வான் நடவடிக்கைப் படை ட்ரோன் பிரிவு தலைவர் சுப்ரிடெண்டண்ட் ரஷா அஸால்டின் ஷாஃபி தெரிவித்தார்.