Homeகுற்றவியல்கோவிட் 19 : இன்று 40 சம்பவங்கள் பதிவு! ஒருவர் மரணம்; 70 பேர் குணமடைந்துள்ளார்கள்!

கோவிட் 19 : இன்று 40 சம்பவங்கள் பதிவு! ஒருவர் மரணம்; 70 பேர் குணமடைந்துள்ளார்கள்!

புத்ராஜெயா, மே. 14-

மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,819 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,356 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று காரணமாக 16 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் 4 பேர் செயற்கை சுவாச உதவியை நாடியுள்ளார்கள்.

இந்த நோய் தொற்றின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரையில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது.

இன்று 70 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,351 ஆக அதிகரித்துள்ளது.

spot_img

latest articles

explore more