கோலாலம்பூர், மே. 18-

பிரதமர் டான்ஶ்ரீ முகிடின் யாசினுக்கு அடுத்த நாற்காலியில் பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அமர்ந்திருந்தார்.

புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமர் நியமிக்கப்படாத நிலையில் கூடல் இடைவெளியின் காரணமாக ஒரு நாற்காலி தள்ளி அஸ்மின் அலி அமர்ந்திருந்தார்.

அஸ்மின் அலியை தொடந்து அமைச்சரவையில் முதன்மை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள அம்னோவின் இஸ்மாயில் சப்ரி யாகோப், ஃபாடிலா யூசோப், ரட்ஸி ஜிடின் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பிரதமரின் அருகாமையில் அஸ்மின் அலி அமர்ந்திருந்ததால், அமைச்சரையில் அதிகம் செல்வாக்கு பெற்ற அமைச்சராக அவர் சித்தரிக்கப்படுகின்றார்.

முன்னதாக பிப்ரவரி மாத மத்தியில் ஷெரட்டன் தங்கும் விடுதியில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட அஸ்மின் அலி முன்னெடுத்த நடவடிக்கை நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சி கலைவதற்கு அடித்தளம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.