கோலாலம்பூர், மே. 22-
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்ட பச்சை நிறக் குறியீடு வழங்கப்பட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தளங்கள் ஜூன் 10 ஆம் நாள் முதல் மீண்டும் திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட சமயங்களுக்கு ஏற்ப வாரத்தின் ஓரிரு முக்கியமான நாட்களில் மட்டுமே வழிபாட்டுத் தளங்களைத் திறக்க முடியும். அத்துடன், ஒரு நேரத்தில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
12 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்களும் வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என தற்காப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்லும் அனுமதி மலேசியர்களுக்கு மட்டுமே. மலேசியர் அல்லாதோர் செல்ல முடியாது. முப்பது பேர் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் வழிபாட்டுத்தளம் சிறியதாக இருந்தால் அதைவிடக் குறைவானவர்கள் மட்டுமே செல்ல முடியும் என டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விளக்கினார்.
இவ்வேளை திருமணங்கள் நட்த்தப்படுவதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.
இது வரை நாடு முழுவதும் 99 ஆலயங்கள், 67 தேவாலயங்கள், 8 குர்துவாராக்கள் உள்ளிட்ட 174 வாழிபாட்டுத் தளங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு அனுமதி பெற்றிருப்பதாக டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.


