Homeகலை உலகம்மோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்

மோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியர் கார்த்திக் சந்திரன் மரணம்

சுங்கை சிப்புட், மே. 25-

சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தவரும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு பின்னர் பந்திங் தெலுக் பங்லிமா காராங் தேசியப் பள்ளி ஒன்றில் பணி புரிந்து வந்த ஆசிரியர் கார்த்திக் சந்திரன் (அகவை 33) மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார்.

சுங்கை சிப்புட் தொகுதி மஇகா இளைஞர் பிரிவிலும் பல்வேறு சமூக அமைப்புகளிலும் துடிப்புடன் செயல்பட்டு வந்த ஆசிரியர் கார்த்திக் நேற்று இரவு மரணமடைந்தது இவ்வட்டாரத்தில் உள்ள பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கம்போங் கமுனிங் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார் என அறியப்படுகிறது.

அவரின் குடும்பத்தாருக்கு அநேகனின் ஆழ்ந்த இரங்கல்.

spot_img

latest articles

explore more