spot_img
7.1 C
London
spot_img
Home மலேசியா கல்வி புதிய முயற்சியின் கீழ் மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழா!

புதிய முயற்சியின் கீழ் மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழா!

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2007ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, இன்று அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கத்தால் (ASTI) தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக பள்ளி அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மிகச் சிறப்பாக கடந்த 13 ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் ஒரு மாபெறும் விழாவாகும். இவ்விழாவில் ஆண்டுதோறும் 40-60 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2020- ஆம் ஆண்டுக்கான அறிவியல் விழா, மாணவர்களின் அறிவியல் செயற்பாங்கு திறன் வளர்ச்சியை முன் நிறுத்தி சில மாற்றங்களுடன் நடத்தப்படவுள்ளது. அந்த வகையில் பள்ளி அளவிலான அறிவியல் விழா வழக்கம் போல் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் வரையில் கைமுறைப் பரிசோதனை அடிப்படையிலும் திரட்டேடு ஆக்கம் அடிப்படையிலும் நடத்தப்படவுள்ளது.

ஜனவரி மாதம் 2020 தொடக்கம், பள்ளி ஆசிரியர்களுக்குப் போட்டிகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சியில் நாடு தழுவிய நிலையில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 394 பள்ளிகளின் 620 ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும், கோறனி நச்சில் (covid-19) பாதிப்புக் காரணமாக இவ்வாண்டு நடத்தப்படும் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா சவால் மிகுந்ததாக இருக்கும் என்பதனை ஏற்பாட்டுக் குழுவினர் கருத்தில் கொண்டுள்ளனர்.

இருந்த போதிலும், எந்த ஒரு சூழலிலும் மாணர்களின் கல்வி வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதில் ஏற்பாட்டுக் குழு உறுதியாக உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு மாற்று வழியில் இவ்வாண்டு இவ்விழா நடத்தப்படவுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையால் பள்ளி அளவிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா, இல்லிருப்பு அறிவியல் விழாவாக காணவுள்ளது. ஆசிரியர்களின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளையும் பரிசோதனைகளையும் மாணவர்கள் வீட்டிலேயே செய்ய ஊக்குவிக்கப்படுகிறர்கள். போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பதக்கம் வழங்கப்படும். இந்த வெற்றியாளர்களை ஆசிரியரே தேர்ந்தெடுப்பர். மாணவர்களுக்கான பதக்கங்களையும் நற்சான்றிதழ்களையும் ஏற்பாட்டுக் குழுவினரே வழங்குவர்.

இந்த இல்லிருப்பு அறிவியல் விழாவில் பள்ளிகள் பங்குபெற வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இருந்த போதிலும், பங்குபெற விரும்பும் பள்ளிகள் இல்லிருப்பு அறிவியல் விழாவை நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை முடிந்த பிறகு நடத்துவதா அல்லது நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் இருக்கும் போதே நடத்துவதா என்பதைப் பள்ளிக்கூடம் தான் முடிவு செய்ய வேண்டும். இல்லிருப்பு அறிவியல் விழாவின் கால அவகாசம் நவம்பர் மாதம் இறுதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இல்லிருப்பு அறிவியல் விழாவின் முன்மொழிவு செயல்திட்டத்தைச் செய்து அனுப்புமாறு ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்ப்பள்யில் பயிலும் அனைத்து மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம். அதன் விவரங்கள் பின்வருமாறு:

1. பள்ளியின் முன்மொழிவு செயல்திட்டத்தை கூகிள் படிவம் (google-form)இல் நிறைவு செய்ய வேண்டும்.
2. நாங்கள் வழங்கும் ஆவணங்களை மாணவர்களுக்குப் பகிர வேண்டும்.
3. இறுதியாக கூகிள் படிவம் (google-form)இல் கொடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

வழங்கப்படும் ஆவணங்கள் பின்வருமாறு:
1. ஆண்டு 1 முதல் 3 வரையிலான மாணவர்களுக்குப் புதிர் கேள்விகளும், திரட்டேடுக்கான தலைப்புகளும் வழங்கப்படும்
2. ஆண்டு 4 முதல் 6 வரையிலான மாணவர்களுக்குப் பரிசோதனைகள் வழங்கப்படும்.

மேலும், ஒளிப்படத்தொகுப்பு (collage) போட்டியும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் இல்லிருப்பு அறிவியல் விழா நடைபெறும் போது செய்யும் நடவடிக்கைகளை ஒளிப்படம் எடுக்க வேண்டும். பின்னர் அவற்றைத் தொகுத்து பள்ளியின் பெயருடன் #HLSFYC2020 படவரியிலும் (Instagram) முகநூலிலும் (Facebook) பதிவேற்றம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம். பள்ளிகள் வெல்லும் பரிசுத் தொகை பின்வருமாறு:

1. முதல் பரிசு ரி.ம 1000
2. இரண்டாம் பரிசு ரி.ம 700
3. மூன்றாம் பரிசு ரி.ம 500

மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும். ஆகவே கடந்த ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் நம் தமிழ்ப்பள்ளிகள் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் கலந்து கொண்டு வற்றாத ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அறிவியல் விழா சம்மந்தப்பட்ட மேல் விபரங்களுக்கு கீழ்கண்ட தொடர்பு எண் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ASTI எனும் முகநூல் பக்கத்தையும் மின்னஞ்சல்களையும் தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்துகிறோம்.

இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா செயற்குழு
No 16A, Jalan 21/12, Sea Park, 46300 Petaling Jaya, Selangor Darul Ehsan.
தொலைப்பேசி எண் : 03-7877 8571/03-7865 5557
தொலைநகல் எண் : 03-7872 9551
மின்னஞ்சல் முகவரி : nsfyc00@gmail.com
இணையதளம்: www.nsfyc.org