கோவிட் 19 : கிருமித் தொற்றின் எண்ணிக்கை குறைகின்றது!

புத்ராஜெயா, ஜூன் 2-மே. 25-

மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 115 ஆக நீடிக்கின்றது என சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,877ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,292 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்றின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரையில் எவரும் மரணமடையவில்லை. இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115ஆக நீடிக்கின்றது.

இன்று 66 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,470 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here