கோலாலம்பூர், ஜூன் 4–
கோரிக்கையைப் பெற்ற அதே நாளிலேயே பொருட்களை விநியோகிக்கும் சேவையை ஐ ஹந்தார் வழங்குகிறது. இச்சேவைக்கான புதிய கைப்பேசி செயலியை வெர்டெக்ஸ் டெக்னோலோஜி சொலுஷன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. ரிடேஸ் எனும் மின் கோரிக்கை செயலி உரிமத்தையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
கைப்பேசி செயலி வழி விநியோக கோரிக்கையைப் பெற்ற அதே நாளிலேயே பொட்டலங்களை விநியோகம் செய்யும் ஒரு தளமே ஐ ஹந்தார் என்று இந்நிறுவனத்தின் தோற்றுநர் கபீர் மாண்ட் கூறினார்.
விரைவான கடித பட்டுவாடா, மொத்த விநியோக பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பலசரக்கு, மருத்துவப் பொருட்கள் உட்பட மேலும் பலவிதமான பொருட்களை ஏற்புடைய கட்டணத்தில் அனுப்புவதற்கு வாடிக்கையாளர்கள் இத்தளத்தை தாராளமாகச் சார்ந்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
“ஒரு பொருளை குறித்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்றெண்ணும்போது பல நிறுவனங்கள் உங்கள் நினைவிற்கு வரலாம். அவற்றுள் ஒன்றாக ஐ ஹந்தார் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. விநியோக சேவை வழங்கப்படும் விதத்தில் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதோடு மக்களின் வாழ்க்கையையும் எளிமைப் படுத்தியுள்ளோம். ஒரு விரல் சொடுக்கில் அனைத்தையும் எளிதாகச் செய்யும் செயலி சார்ந்த உலகில், விநியோக துறைக்கு ஐ ஹந்தார் கனக்கச்சிதமாகப் பொருந்துகிறது” என்றார் அவர்.
பயனீட்டாளர்கள் தங்களின் பொருட்களை அனுப்புவதற்குத் தேவையான வேன், லோரி அல்லது மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுக்க ஐ ஹந்தார் விநியோக செயலி வழி வகுக்கிறது. இப்போதே ஐ ஹந்தார் செயலிக்குச் சென்று ‘டெலிவரி’ என்ற பட்டனை அழுத்தி பொருளைப் பெற மற்றும் அனுப்ப வேண்டிய இடங்களின் விவரங்களைக் குறிப்பிடுங்கள். பெறுநரின் விவரங்களோடு உங்கள் பதிவை உறுதி செய்த பின்னர் வாகனமோட்டி வழி பொருட்களை அனுப்புங்கள். உங்கள் பொருள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்றடையும் வரை அது செல்லும் வழித் தடங்களை செயலி வழி நீங்கள் கண்காணிக்கலாம்.
இந்தச் செயலியை பயனீட்டாளர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வெர்டெக்ஸ் நிறுவனம் தற்போது ஓர் இயக்கத்தை நடத்துகிறது. இந்த இயக்கத்தின் கீழ் பயனீட்டாளர்கள் 50 வெள்ளி மதிப்பை அதிகரிக்கும் போது அவர்களுக்கு கூடுதலாக 5 வெள்ளி போனஸ் வழங்கப்படும். 100 வெள்ளியை அதிகரிக்கும்போது அவர்களுக்கு கூடுதலாக 15 வெள்ளியும் 200 வெள்ளியை அதிகரிக்கும்போது 25 வெள்ளியும் போனஸாக வழங்கப்படும்.
சந்தையில் காணப்படும் இதர தயாரிப்பு பொருட்களுக்கு மத்தியில் தனித்து விளங்குவதற்காக பல்வேறு சிறப்பு தன்மைகளை ஐ ஹந்தார் கொண்டுள்ளது என்று கபீர் தெரிவித்தார். ஏற்புடைய விலையில் சிறந்த, தரமிக்க மற்றும் வசதியான சேவையை ஐ ஹந்தார் வழங்குகிறது.
பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள வாகனமோட்டிகள் அனைவரும் குற்றச்செயல் பின்னணி இல்லாதவர்கள் என்ற சான்றிதழைப் பெற்றவர்களாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், சேவையை முன் பதிவு செய்வது, பல்வேறு இடங்களில் நிறுத்தும் வசதி ஆகியவற்றுக்கு உதவும் வாடிக்கையாளர் சேவை முறையையும் ஐ ஹந்தார் கொண்டுள்ளதாக இவர் கூறினார்.
“அனைத்தும் ரொக்கமற்றவையாக உள்ளன. பொருட்களை வாங்குவது மற்றும் சேவை கட்டணம் யாவும் இப்போது புதிய வழக்கத்திற்கு ஏற்ப புதிய நடைமுறையாக உள்ளன. அனைத்து வாடிக்கையாளர்களிடமும் இந்த வசதிகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்.
மாறிக் கொண்டிருக்கும் சந்தை முறை மற்றும் வாடிக்கையாளர்களின் கொள்முதல் நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பொருட்களையும் சேவைகளையும் வழங்க வேண்டியது அவசியமாகும். பயனீட்டாளர்களே சந்தைகளின் அரசர்களாவர். அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் பயனீட்டாளர்கள் மற்றும் அவர்களின் மனநிறைவில் அடங்கியுள்ளன “ என்றார் அவர்.
ஐ ஹந்தார் கடந்த ஜூன் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த வர்த்தகத்தை மேம்படுத்த பல்வேறு வியூகங்கள் மேற்கொள்ளப்படுவதால் விநியோக சேவை சந்தை மற்றும் நிறுவனம் வெற்றிகரமாக நடைபோடும் என்று கபீர் உறுதி அளித்தார்.
“இந்த வர்த்தகத்தை மேம்படுத்த சந்தையை ஆக்கப்பூர்வமாக விரிவுபடுத்துவது குறித்து நாங்கள் சிந்தித்து வருகிறோம். இந்த விரிவாக்கத்திற்கு சாத்தியமான புதிய வாடிக்கையாளர் பின்னணியை ஆராய்ந்து புதிய சந்தைக்குள் அடியெடுத்து வைப்பது மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் எங்களின் சேவையை நாடுவது உட்பட அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்து வருகிறோம்” என்றார் அவர்.
உலகின் யதார்த்த பிரச்னைகளுக்கு உண்மையான தீர்வுகளைத் தேடும் பொருட்டு இந்நிறுவனம் அதன் சேவைப் பட்டியலையும் விரிவாக்கம் செய்யும் என்றும் அவர் விவரித்தார்.
“இத்துறையில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நாங்கள் போட்டியாளர்களாகப் பார்க்கவில்லை. அதே சமயம், பயனீட்டாளர்களையும் பங்காளிகளையும் ஈர்க்க பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்” என்று கபீர் சொன்னார்.
ஐ ஹந்தார் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான கால கட்டத்திலேயே. 1,000க்கும் மேற்பட்ட சேவை பங்காளிகளை தன் வசம் ஈர்த்துள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தாங்கள் எதிர்பார்க்கப்படுவதாக காதீர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிறுவனத்தில் தீபகற்ப மலேசியா முழுவதிலும் 1,000திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.


