ஆஸ்ட்ரோவில் டே நைட் ப்ரிமியர்

வியாழன், 11 ஜூன்
ஜூந்தா கஹின் கா (ப்ரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), 9pm | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ரிஷி கபூர், ஜிம்மி ஷேர்கில், லில்லெட் துபே & சன்னி சிங்
சிறந்த நண்பர்களான வருண் மற்றும் கரண் எந்தவிதமான குழப்பமும் வராது என்று எண்ணி அடையாளங்களை இடமாற்றம் செய்து தங்கள் காதலை தொடர்கையில் அஃது பெரும் குழப்பங்களுக்கு வழிவகுக்கின்றது.

வெள்ளி, 12 ஜூன்
டே நைட் (ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), 9pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஆதர்ஷ் & அன்னம் ஷாஜன்
சேலம் மற்றும் சென்னை இடையே ஒர் இரயில் கொள்ளை ஏற்ப்பட, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்பணம் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணிக்கிறது.

சனி, 13 ஜூன்
ரோட் (ப்ரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10pm | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: மனோஜ் பாஜ்பாய், விவேக் ஓபராய் & அந்தாரா மாலி
ஒரு ஜோடி சாலையில் செல்லும் ஒருவரிடம் போக்குவரத்து உதவியை நாட முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்கள் தேர்வு செய்தவர் ஒரு மனநோயாளியாக இருக்கவே அவர் அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறார்.

தி மேகிங் ஓவ் வெடிகுண்டு பசங்க (The making of Vedigundu Pasangge) (ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), 7.30pm | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
அவர்களின் இனிமையான நினைவுகள், போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து டேனேஸ் குமார், சங்கீதா மற்றும் இயக்குனர் டாக்டர் விமலா பெருமாள் ஆகியோருடன் ஒரு அற்புதமான நேர்காணல். இத்திரைப்படத் தயாரிப்பின் திரைக்குப் பின்னால் ஏற்ப்பட்ட சம்பவங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

தளபதி (அலைவரிசை ப்ரிமியர்)
ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), 6pm
நடிகர்கள்: ரஜினிகாந்த், மம்மூட்டி & ஷோபனா
சேரியில் வளர்க்கப்பட்ட சூர்யா என்ற அனாதை நல்ல விஷயங்களுக்காக குற்றங்கள் புரியும் தேவராஜ் என்ற முதலாளியுடன் நட்பு கொண்டு அவருக்காக வேலை செய்கிறான். ஒரு புதிய நேர்மையான மாவட்ட கலெக்டர் வரும்போது அவர்களின் இருப்பு அச்சுறுத்தப்படுகிறது.

சந்திரமுகி (அலைவரிசை ப்ரிமியர்)
ரஜினி70 எச்டி (அலைவரிசை 100), 9pm
நடிகர்கள்: ரஜினிகாந்த், ஜோதிகா & பிரபு
பழிவாங்க எண்ணும் ஒரு பண்டைய வேசியரின் ஆவியால் கைவிடப்பட்ட மாளிகையில் நிகழும் மர்ம நிகழ்வுகள்.

ஞாயிறு, 14 ஜூன்
யோதா (Yodha) (ப்ரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), 10pm | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சன்னி தியோல், சஞ்ஜை தத் & சங்கீதா பிஜ்லானி
உண்மை, நியாயம் மற்றும் நீதிக்காக போராடும் வக்கீல் கரண், பாதாள உலகில் ‘டாகா’ என்று அழைக்கப்படும் நீதிபதி தர்மேஷ் அக்னிஹோத்ரியை தனது பத்திரிகை நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அம்பலப்படுத்தியதோடு அவரது முகத்திரையை கிழித்த பத்திரிகையாளர் சந்திரகாந்தின் மகன் ஆவார்.

நலம் அறிய ஆவல் (ப்ரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) , 11am | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
ஒரு மருத்துவ இதழைச் சார்ந்த இந்நிகழ்வு 10 அத்தியாயங்களைக் கொண்டது. வயது, இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றை அப்பாட்ப்பட்டு மலேசியர்களிடையே ஏற்படும் தற்போதைய மிகவும் ஆபத்தான நோய்களைப் பற்றி பார்வையாளர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. யோகா, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறை என ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளின் பல்வேறு குறிப்புகளையும் இந்நிகழ்வு வழங்கும்.

குற்றம் குற்றமே (புதிய அத்தியாயம் – 5)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 8pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்.

அமுதன் தனது புதிய இணைய நண்பரிடமிருந்து பரிசு பார்சலைப் பெறுகிறார். அதன்பிறகு, அசோக் என்ற அறியப்படாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது. அழைத்தவர் தன்னை ஒரு இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்துகிறார். புதிய இணைய நண்பரால் அமுதனுக்கு அனுப்பப்பட்ட பார்சலில் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்ததாகவும், அமுதன் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பணம் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என்றும் கோருகிறார். தனக்கு அதிக தேர்வுகள் இல்லை என்று உணர்ந்த அமுதன், அசோக் என்ற நபருக்குக்கு பணம் அனுப்பத் தொடங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here