கோவிட் 19 : 277 சம்பவங்கள் பதிவு!

புத்ராஜெயா, ஜூன் 4-
மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 277 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 115 ஆக நீடிக்கின்றது என சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இன்று பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 2 வெளிநாட்டவர்கள், 275 மலேசியாவில் உள்ள அந்நியர்கள், 4 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,247 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,573 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று காரணமாக 6 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் 2 பேர் செயற்கை சுவாச உதவியை நாடியுள்ளார்கள்.

இந்த நோய் தொற்றின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரையில் எவரும் மரணமடையவில்லை. இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 115ஆக நீடிக்கின்றது.

இன்று 28 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,559 ஆக அதிகரித்துள்ளது. இது 79.53 விழுக்காடு ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here